“யாருங்க இவரு.. பரபரப்பான ரோட்டுல இப்படி பன்றாரு” கடுப்பான நெட்டிசன்கள்! (வீடியோ)

inline-skating-expressway-singapore

சிங்கப்பூரில், பரபரப்பான மத்திய விரைவுச் சாலையில் ஸ்கேட்டிங் அணிந்த ஆடவர் ஒருவர் சாலையில் பயணித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த வினோத காட்சிகள், மே 6 அன்று புக்கிட் திமா சாலை Exit நோக்கி வழியில் CTE சாலையில் பயணித்த வாகனத்தின் டேஷ்கேமில் சிக்கியது.

சாலையில் சென்றுகொண்டிருந்த வேன்., திடீரென சுழன்று சாலை தடுப்பு, வெளிநாட்டு ஊழியர் ஏற்றிச்செல்லும் லாரியில் மோதி விபத்து

இன்லைன் ஸ்கேட்டிங் (inline skating) மூலம் சாலையில் சென்ற அவர், குறைந்தது இரண்டு கார்கள் மோதுவதில் இருந்து அதிஷ்டவசமாக தப்பினார்.

இந்த காணொளி நெட்டிசன்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்துள்ளது, அவரின் உயிருக்கு இது ஆபத்தை ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் இது ஆபத்தை ஏற்படுத்தும் என பலர் கருத்து கூறினர்.

இதற்கு ஒருவர், “ஹா.. ஹா.. ஹா.. அரசு அதிவேக நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டக்கூடாது என்ற பலகையை வைத்தது, ஆனால் ஒருவர் ஸ்கேட்டிங் செல்கிறார்” என்று நகைச்சுவையாக கூறினார்.

“சிங்கப்பூரின் பெருமை பிரதமர் லீ” – மிக உயரிய விருதை பெற்றுக்கொண்டார் பிரதமர்!