சாலையில் சென்றுகொண்டிருந்த வேன்., திடீரென சுழன்று சாலை தடுப்பு, வெளிநாட்டு ஊழியர் ஏற்றிச்செல்லும் லாரியில் மோதி விபத்து

Van crashes railing lorry

பான் தீவு விரைவுச்சாலையில் (PIE) புக்கிட் திமா எக்ஸ்பிரஸ்வே (BKE) நோக்கிச் சென்ற வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சுழன்று சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த அதிர்ச்சி காணொளி SG Road Vigilante Facebook குழுவில் நேற்று வியாழக்கிழமை (மே 5) பதிவேற்றப்பட்டுள்ளது.

தேக்கா சென்டரில் சண்டை… இருவரை கைது செய்தது போலீஸ் – வீடியோ வைரல்

இதில் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி செல்லும் லாரி அதிஷ்டவசமாக தப்பித்தது, நல்ல வேலையாக பெரிய அளவில் அதில் வேன் மோதவில்லை.

திடீரென்று, வாகனம் 90-டிகிரியில் இடதுபுறப் பாதையை நோக்கி சுழன்று, சாலை தடுப்பை நோக்கிச் சென்றது. பேரிகார்ட் தடுப்பில் மோதிய பிறகு, வேன் மூன்றாவது பாதையில் சென்றுகொண்டிருந்த லாரி மீதும் மோதியது.

அதனை அடுத்து, ஒருவர் Ng Teng Fong மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக SCDF கூறியது.

அதாவது, 27 வயதான வேன் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

விசாரணைகள் தொடர்வதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் உரிய அனுமதி இல்லாமல் இருந்த இருவர்… சுமார் 8 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தட்டி தூக்கிய போலீஸ்