உள்ளாடையில் மறைத்து வைத்து சிங்கப்பூரில் இருந்து தங்கத்தைக் கடத்தி வந்த பயணி…..சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!

உள்ளாடையில் மறைத்து வைத்து சிங்கப்பூரில் இருந்து தங்கத்தைக் கடத்தி வந்த பயணி.....சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!
Photo: Trichy Customs

 

வெளிநாடுகளில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கம் மற்றும் போதைப்பொருட்களைக் கடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் திருச்சி மண்டல வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள், விமான நிலையம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டும், அவ்வப்போது பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சோதனை செய்து வருகின்றனர்.

நிலைதடுமாறி கால்வாயில் விழுந்த ஆடவர் – மிகவும் பலவீனமாக இருந்ததாக தகவல்

அந்த வகையில், செப்டம்பர் 17- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வரும் பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக, வான் நுண்ணறிவுப் பிரிவுச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஸ்கூட் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில், வரிசையில் நின்றுக் கொண்டிருந்த பயணியைப் பிடித்து அதிகாரிகள் விசாரணையும், சோதனையும் நடத்தினர்.

“சிங்கப்பூருக்கு வர வேண்டும் என்று இதை செய்யாதீங்க” – சிக்கிய சிவகங்கை ஊழியர் மீது வழக்கு பதிவு

அதில் அவர் உள்ளாடையில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தி வந்ததைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து, அந்த பயணியிடம் இருந்து சுமார் 1,600 கிலோ எடைக் கொண்ட தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், தீவிர விசாரணைக்கு பின்னர், அந்த பயணியை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூபாய் 96 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகள் தங்கத்தைக் கடத்தி வரும் சம்பவம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.