“சிங்கப்பூருக்கு வர வேண்டும் என்று இதை செய்யாதீங்க” – சிக்கிய சிவகங்கை ஊழியர் மீது வழக்கு பதிவு

"சிங்கப்பூருக்கு வர வேண்டும் என்று இதை செய்யாதீங்க" - சிக்கிய சிவகங்கை ஊழியர் மீது வழக்கு பதிவு

சிங்கப்பூருக்கு வர வேண்டும் எப்படியாவது சம்பாதித்து முன்னேற வேண்டும் என்ற ஆசை தமிழ் ஊழியர்கள் பலருக்கு இருக்கிறது.

அதனை முறையாக செய்து வேலை அனுமதியுடன் சிங்கப்பூர் வந்து சம்பாரித்து முன்னேறுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

சிங்கப்பூரில் இந்திய ஊழியருக்கு சிறை விதிப்பு.. பிரம்படி??

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சிங்கப்பூர் வர இருந்த தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் பூசலாங்குடியை சேர்ந்த ஊழியர் குமரேசன் (51) பிடிபட்டார்.

சிங்கப்பூர் செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த அவரை குடிநுழைவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அவரின் பாஸ்ப்போர்ட்டை சோதித்ததில் அது கோவில்பட்டியை சேர்ந்த மணி (54) என்ற நபரின் முகவரியில் உள்ள போலியான பாஸ்போர்ட் என்பது கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

“சிங்கம் போன்ற தனித்துவமான சிங்கப்பூர்.. கட்டியெழுப்பிய தந்தை லீ குவான் யூ” – வரலாற்றை சொல்லும் மிக நீளமான சுவரோவியம்