“சிங்கம் போன்ற தனித்துவமான சிங்கப்பூர்.. கட்டியெழுப்பிய தந்தை லீ குவான் யூ” – வரலாற்றை சொல்லும் மிக நீளமான சுவரோவியம்

"சிங்கம் போன்ற தனித்துவமான சிங்கப்பூர்.. கட்டியெழுப்பிய தந்தை லீ குவான் யூ" - வரலாற்றை சொல்லும் மிக நீளமான சுவரோவியம்
Photo: SMRT

சிங்கப்பூரின் வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் கையால் வரையப்பட்ட மிக நீளமான வரலாற்று ஓவியம் அறிமுகமாகியுள்ளது.

தஞ்சோங் பகார் MRT ரயில் நிலையத்தில் கடந்த செப். 16 அன்று அது அறிமுகமானது.

சிங்கப்பூரில் இந்திய ஊழியருக்கு சிறை விதிப்பு.. பிரம்படி??

ஓவிய கலைஞர் இங்பெங் சிங் வரைந்த இந்த ஓவியம் “Singapore on Canvas” என்று தலைப்பிடப்பட்டுள்ளது, இது 67 மீட்டர் நீளமும் 1.7 மீட்டர் உயரமும் கொண்டது.

“Communities in Station” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தில் குறைந்தது ஒரு வருடம் அந்த ஓவியம் காட்சிப்படுத்தப்படும்.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் சமூகங்களுடனான உறவை வலுப்படுத்துவதும், மேலும் ரயில் கட்டமைப்பில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதும் ஆகும்.

சிங்கப்பூர் வரலாறு

200 ஆண்டுகளுக்கும் மேலான சிங்கப்பூர் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள், தேதிகள், தளங்கள் மற்றும் புள்ளிவிவரங்களை இது சித்தரிக்கிறது.

பிரிட்டிஷ் காலனித்துவ காலங்கள், இரண்டாம் உலகப் போர், சுதந்திர பயணம் ஆகியவை அதில் அடங்கும்.

அதே போல, சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் கீழ் முதல் உலக நாடாக விரைவான வளர்ச்சி கண்ட சிங்கப்பூர் மற்றும் இன்று பெரும் வளர்ச்சி கண்ட பெருநகரமாக சிங்கப்பூர் மாறியுள்ளதும் அதில் அடங்கும்.

“இந்த வேலையை செய்யுங்க உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்” – ஏமாந்துபோன பல ஆயிரம் பேர்