சர்வதேச யோகா தினத்தையொட்டி, சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு!

Photo: High Commission of India in Singapore Official Facebook Page

கடந்த 2015- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21- ஆம் தேதி அன்று முதல் சர்வதேச யோகா தினம் (International Yoga Day) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினத்தை அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், யோகா பயிற்சியை மேற்கொள்வதால், நமது உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்த கருத்தரங்கமும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் யோகா கலை பயிற்சியாளர்கள் பங்கேற்று பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு யோகா குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

மறைந்த முன்னாள் சிங்கப்பூர் நடிகர் – ஆழ்ந்த இரங்கல்கள்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று (21/06/2022) ஏழாவது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்தியா முழுவதும் நடைபெற்ற சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். சிலர் தாங்கள் யோகா செய்வதை வீடியோவாகப் பதிவு செய்துக் கொண்டு, அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, மற்றவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

அதேபோல், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரங்களும் சர்வதேச யோகா தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக, சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் (High Commission Of India, Singapore), மெரினா கார்டன்ஸ் ட்ரைவ் (8 Marina Gardens Drive) என்ற இடத்தில் ஏற்பாடு செய்திருந்த யோகா தின நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். தூதரக அதிகாரிகள் மற்றும் சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் நிகழ்ச்சியில் யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.

சிங்கப்பூரில் Facebook,Tiktok போன்ற சமூகவலைத் தளங்களுக்கு புதிய விதிமுறைகள் – 50% சிங்கப்பூரர்கள் இணையத்தால் பாதிப்பு

இன்றைய காலகட்டத்தில் உணவுமுறைகள், நமது அன்றாட வாழ்க்கை முறை மாறி வரும் சூழலில் யோகா பயிற்சி ஒவ்வொருவருக்கும் கட்டாயம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.