உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 25 வயதுக்கு உட்பட்ட 10 பேருக்கு தடுப்புக்காவல்

(Photo: Ernest Chua)

சிங்கப்பூரில் கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 25 வயதுக்கு உட்பட்ட 10 பேர் தடுத்துவைக்கப்பட்டதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

அல்ஜூனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரெராவின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் அமைச்சர் அதனை தெரிவித்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கல்லாங் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி ஆடவர் உயிரிழப்பு

அதாவது பயங்கரவாதம் குறித்த சிந்தாந்த நடவடிக்கைகளுக்காக அவர்கள் தடுத்துவைக்கப்பட்டனர். அதில் 16 – 18 வயதுக்கும் இடையில் 3 பேர் உள்ளனர், அவர்களில் 2 பேர் தொடர் தடுப்புக் காவலில் உள்ளனர்.

மேலும் 19 – 25 வயதுடைய 7 பேரில் இருவர் தற்போது தடுப்புக் காவலில் உள்ளனர் என்றும், மீதமுள்ளோர் கட்டுப்பாட்டு உத்தரவில் விடுவிக்கப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

அவர்கள் 2 ஆண்டில் இருந்து 6 ஆண்டுகள் வரை தடுத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் திரு. சண்முகம் கூறினார்.

விதிமுறை மீறல்: 4 பேரின் Work Pass ரத்து – சிங்கப்பூரில் வேலைசெய்ய நிரந்தர தடை!