மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 18 பேர் கைது!

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 18 பேர் கைது!
Photo: Singapore Police Force

 

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 18 பேரை சிங்கப்பூர் போக்குவரத்துக் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

‘புத்தாண்டு கொண்டாட்டம் 2024’: சிங்கப்பூரில் 7 ஹார்ட்லேண்ட் இடங்களில் கண்கவர் வாணவேடிக்கைகள் நடைபெறும் என அறிவிப்பு!

சிங்கப்பூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்துகள் ஏற்படுவது அதிகரித்துள்ளதாலும், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதாலும், நேற்று (டிசம்பர் 23) அதிகாலை சிங்கப்பூரின் தீவு முழுவதும் சிங்கப்பூர் போக்குவரத்துக் காவல்துறையினர், தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வாகன ஓட்டிகளிடம் சுவாச சோதனை செய்யப்பட்டது. இதில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 10 ஆண்கள், 7 பெண்கள் மற்றும் சுவாச சோதனை செய்துக் கொள்ள மறுத்த 35 ஆண் நபர் என மொத்தம் 18 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

“76 வயது மூதாட்டியைக் காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

இவர்கள் மீது அனுமதிக்கப்பட்ட அளவை மீறி மது அருந்தியது, மது அருந்தியதுடன் வாகனத்தை இயக்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.

சிங்கப்பூர் சட்டப்படி, மது அருந்திவிட்டு வாகன ஓட்டுபவர்கள் முதல்முறையாக கைது செய்யப்பட்டால் 10,000 வெள்ளி அபராதம் (அல்லது) 12 மாதம் வரை சிறை (அல்லது) இரண்டுமே விதிக்கப்படலாம். அதேபோல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி, போக்குவரத்துக் காவல்துறையினரிடம் இரண்டாவது முறையாக மாட்டிக் கொண்டால் அவர்களது ஓட்டுநர் உரிமம் பறிக்கப்பட்டு, வாகனம் ஓட்ட தடை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.