அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஈஸ்வரன்!

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஈஸ்வரன்!
Photo: Facebook/ S.Iswaran

 

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள எஸ்.ஈஸ்வரன், தான் வகித்து வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவி, வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி (West Coast Group) நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, மக்கள் செயல் கட்சியின் (People’s Action Party- ‘PAP’) உறுப்பினர் என அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார். இதனை சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் வாடகை, உயரும் செலவுகள்.. கடைகளை காலி செய்யும் வியாபாரிகள்

அதேபோல், கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூலை மாதம் லஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவின் (Corrupt Practices Investigation Bureau) விசாரணை தொடங்கியதில் இருந்து தான் பெற்ற சம்பளம், நாடாளுமன்ற உறுப்பினராகப் பெற்ற படித்தொகை ஆகியவற்றை முழுவதும் திருப்பிச் செலுத்துவதாக எஸ்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளதாக பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

இதனிடையே, நேற்று (ஜன.18) நீதிமன்றத்தில் ஆஜரான எஸ்.ஈஸ்வரன் மீது 2 ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட 27 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தில் சென்றவாறு பொங்கல் ஒளியூட்டைப் பார்த்து ரசித்ததுடன் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!

தனது பதவி விலகல் குறித்து எஸ்.ஈஸ்வரன், ஜனவரி 16- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்- க்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் புதிய போக்குவரத்துத்துறை அமைச்சராக சீ ஹொங் டாட் (Chee Hong Tat) நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃ பூவுக்கு (Grace Fu) வர்த்தகத்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.