இந்திய ஊழியருக்கு சிறை, பிரம்படி.. இளம்பெண்ணை காட்டுக்குள் இழுத்துச்சென்று நாசம் செய்த ஊழியர்

Capital punishment in Singapore is a legal penalty

இளம்பெண்ணை காட்டுக்குள் இழுத்துச்சென்று நாசம் செய்த இந்திய ஊழியருக்கு தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

துப்புரவு ஊழியரான 26 வயதான சின்னையா கார்த்திக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 12 பிரம்படிகளும் வெள்ளிக்கிழமை (அக். 27) விதிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு இனி கப்பலில் வரலாம் – கட்டணம் எவ்ளோ?

என்ன நடந்தது?

அப்போது பல்கலைக்கழக மாணவியாக இருந்த அந்த பெண், சாங்கியில் உள்ள கல்லூரி வளாகத்திற்கு திரும்பிச் செல்ல தவறான ரயிலில் ஏறியுள்ளார்.

அதன் பின்னர், கிராஞ்சியில் உள்ள ரயில் நிலையத்தில் அவர் இறங்கியதாகவும், பின்னர் பேருந்தில் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லலாம் என்று திட்டமிட்டு நடக்கவும் தொடங்கியுள்ளார்.

காதலர்களுக்குள் வாய் தகராறு

நள்ளிரவு நேரம் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்ற 23 வயது பல்கலைக்கழக மாணவியை பின்தொடர்ந்து சென்றுள்ளார் சின்னையா கார்த்திக் என்ற ஊழியர்.

அப்போது, ​​அந்த பெண் தனது காதலனுடன் நீண்ட தூரம் கைபேசி அழைப்பில் பேசிக்கொண்டு வந்ததாகவும், காதலர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

பேருந்து நிறுத்தத்தை சுற்றி சிலர் இருந்ததால் கொஞ்சம் தனியாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில், அந்த பெண் அடுத்த பேருந்து நிறுத்தத்திற்கு நடக்க ஆரம்பித்தார்.

பின்தொடர்ந்த சின்னையா

கைபேசியில் பேசிக்கொண்டே அவர் தனது சுற்றுப்புறத்தை கவனிக்காமல், சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை நடந்தார் என்று துணை அரசு வழக்கறிஞர் கூறினார்.

தன் காதலனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் அழுதுள்ளார், அப்போது அவரை அணுகிய சின்னையா ஏதும் பிரச்சனையா என்று விசாரித்துள்ளார்.

எனக்கும் ஒன்றுமில்லை என்று கூறிய அந்த பெண், என்னை தனியாக விடுங்கள் என்றும் ஊழியரிடம் கூறியுள்ளார்.

பின்னர் தாம் இருக்குமிடம் அறிமுகமில்லாததை கவனித்த பெண், திரும்பி கிராஞ்சி ரயில் நிலையத்திற்குத் நடக்க முயன்றார்.

அப்போது, சின்னையா பெண்ணின் கையைப் பிடித்து “நீ போ, நீ போ” என்று அவர் நடந்து வந்த திசையை நோக்கி கீழே தள்ளினார்.

சின்னையா முணுமுணுத்ததை புரிந்து கொள்ள முடியாமல் அந்த பெண் அவர் சொன்ன திசையை நோக்கிச் நடந்தார்.

அப்போது அந்த பெண் திரும்பிப் பார்த்த பிறகுதான் சின்னையா தன்னைப் பின்தொடர்ந்து வருவதை உணர்ந்தார்.

பெண்ணை தாக்கிய சின்னையா

இது குறித்து கைபேசி அழைப்பில் இருந்த தன் காதலனிடம் அந்த பெண் தெரிவித்தார். உடனே திறந்தவெளிக்குச் சென்று டாக்ஸியைக் பிடிக்குமாறு காதலன் வற்புறுத்தினார்.

ஆனால் அதற்கு வழியில்லாததால், சாலையைக் கடந்து கிராஞ்சி ரயில் நிலையத்திற்குத் திரும்ப அந்த பெண் முடிவு செய்தார்.

பின்னர் சாலையை நடு பகுதியை அடைந்தபோது, ​​​​சின்னையா அந்த பெண்ணை பிடித்து முகத்தில் ஒரு குத்து விட்டார் என சொல்லப்பட்டுள்ளது.

வலியில் பெண் அலறும் சத்தத்தை காதலன் கைப்பேசியில் கேட்டு பலமுறை என்னாச்சு என்று கேட்டும் பெண்ணிடம் இருந்து எந்த பதில் வரவில்லை.

இந்த நிலையில், சின்னையா பெண்ணின் முகத்தில் பலமுறை குத்தினார், இதனால் அவர் அணிந்திருந்த கண்ணாடி கீழே விழுந்தது, இதனால் பெண்ணால் தெளிவாக பார்க்க முடியவில்லை.

காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் சென்றார்

பின்னர் சின்னையா தனது கையால் பெண்ணின் கழுத்தை இறுக்கமாக பிடித்து, காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் சென்றார்.

பின்னர் அங்கு வைத்தே அவரை நாசம் செய்ததாக கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர் அங்கிருந்து சின்னையா சென்றார்.

அதன் பின்னர் அந்த பெண் அவரின் கைபேசியை எடுத்து காதலனிடம் நடந்ததை கூறினார். பின்னர் காதலன் பெண்ணின் தோழியை தொடர்பு கொண்டு அது பற்றிக்கூற அவர் போலீசாரை அழைத்தார்.

போலீசார் வந்த பிறகு, அந்த பெண் பாலியல் வன்கொடுமை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு பெண்ணின் கழுத்தில் கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளங்கள் உட்பட பல கீறல்கள், காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த சம்பவம் 2019 மே மாதம் 4 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் போலீசார் மேற்கொண்ட சோதனையில் சின்னையா 2019 மே மாதம் 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் கடந்தும் அந்த பெண்ணால் இந்த பாதிப்பில் இருந்து வெளியே வர முடியவில்லை என கூறப்பப்ட்டுள்ளது.

தனக்கு ஏற்பட்ட இந்த சம்பவம் குறித்து வீட்டில் கூறாத அந்த பெண், அடிக்கடி தனியே சென்று அழுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு எந்தந்த துறைகளில் வேலை அதிகரித்துள்ளது – தெரிந்துகொள்ளுங்கள்