பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ஆடவருக்கு சிறை

Photo: Getty

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளில், பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டியது மற்றும் மசூதியில் வழிபாடு செய்பவர், கிராப்ஃபுட் ரைடர் மற்றும் அவரது சொந்த தாயிடமிருந்து திருடியது உட்பட பல குற்றங்களை இளைஞர் ஒருவர் செய்துள்ளார்.

தற்போது 22 வயதாகும் நூர் ஹஃபிசாத் செலாமத்துக்கு இன்று (டிசம்பர் 27) இரண்டு மாதங்கள் மற்றும் இரண்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் சுமார் 52,000 ஊழியர்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லை – MOM

திருட்டு, பாலியல் சீண்டல் மற்றும் முறைகேடு ஆகியவை தொடர்பாக ஐந்து குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் ஏழு குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்பட்டன.

27 வயது பெண் ஒருவர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் லிஃப்டுக்காக காத்திருக்கும்போது, அவரை கவனித்த ஹஃபிசாத், லிப்ட் கதவுகள் திறக்கும் நேரத்தில் தன் கையால் அந்தப் பெண்ணின் பின்புறத்தை ஒரு முறை தட்டினார்.

அப்பெண் லிப்டிற்குள் நுழைந்ததும், ஹஃபிசாத் அவளுக்கு சைகையால் முத்தம் கொடுத்துவிட்டு, அவளை நோக்கி கைகாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் கேமரா காட்சிகளில் பிடிபட்டது. அதன் பின்னர், பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையை அழைத்தார்.

மேலும், தனது தாயின் பையில் இருந்து S$250 திருடியதாகவும் மற்றும் பள்ளிவாசலில் ஒருவரின் கைபேசியை எடுத்து சென்றது தொடர்பாகவும் இவர் மீது புகார் செய்யப்பட்டது.

அதே போல, ​GrabFood ஓட்டுனரின் இ-பைக்கில் இருந்த பை ஒன்றையும் அவர் திருடியதாக கூறப்படுகிறது. அந்த பையில் பாஸ்போர்ட் மற்றும் S$700 பணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Work passes, PR உள்ளிட்ட அனுமதிகள் பெற இனி கட்டுப்பாட்டு நிபந்தனை… பிப்ரவரி 1 முதல் நடைமுறை