சிங்கப்பூரில் சுமார் 52,000 ஊழியர்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லை – MOM

(photo: mothership)

சிங்கப்பூரில் சுமார் 52,000 ஊழியர்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லை என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

முன்னர், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் வரும் ஜனவரி 15 முதல் பணியிடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற அறிவிப்பு வந்த நிலையில், இந்த தடுப்பூசி குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

Work passes, PR உள்ளிட்ட அனுமதிகள் பெற இனி கட்டுப்பாட்டு நிபந்தனை… பிப்ரவரி 1 முதல் நடைமுறை

இவர்களில், சுமார் 6,700 பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என்றும், அவர்கள் கடுமையான நோய் அல்லது COVID-19 நோய்த்தொற்றால் கடும் அபாயத்தில் உள்ளனர் என்று MOM தெரிவித்துள்ளது.

“இந்த ஊழியர்களில் ஒரு சிறிய பகுதியினர் மட்டுமே மருத்துவ ரீதியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியற்றவர்கள்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 19 வரை, 80 சதவீத நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு 100 சதவீத தடுப்பூசியை போட்டுகொண்டுள்ளன.

மேலும், மொத்த பணியாளர்களில் 98 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்களில் சுயதொழில் செய்பவர்கள் இல்லை.

“சிங்கப்பூரில் வரும் நாட்கள், வாரங்களில் Omicron புதிய அலை எதிர்பார்ப்பு” – லாரன்ஸ் வோங்