சிங்கப்பூரில் வெளியாகும் ‘ஜெயிலர்’ திரைப்படம்- திரையரங்குகளின் பட்டியல்!

சிங்கப்பூரில் வெளியாகும் 'ஜெயிலர்' திரைப்படம்- திரையரங்குகளின் பட்டியல்!
Video Crop Image

 

 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி காந்த நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. முன்னணி நடிகைகள் தமன்னா, ரம்யாகிருஷ்ணன் மற்றும் முன்னணி நடிகர்களான சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மலேசியாவுக்கு வேலைக்குச் சென்ற தமிழருக்கு நேர்ந்த கொடூரம்!

தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுடன் ‘பான் இந்தியா’ முறையில் உருவாகியுள்ள இப்படத்தை கலாநிதி மாறனின் ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த படம் ஆகஸ்ட் 10- ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சிங்கப்பூரில் வெளியாகும் 'ஜெயிலர்' திரைப்படம்- திரையரங்குகளின் பட்டியல்!
File Photo

அந்த வகையில் சிங்கப்பூரிலும் வெளியாக உள்ளது. சிங்கப்பூரில் உள்ள பிரபல திரையரங்க நிறுவனங்களான Golden Village, Carnival Cinemas, We Cinemas, Cathay Cineplex, Shaw Theatres ஆகியவற்றில் உள்ள சுமார் 20- க்கும் மேற்பட்ட திரைகளில் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்தியரை இன ரீதியாக கொச்சைப்படுத்தி, எட்டி உதைத்த சிங்கப்பூர் ஆடவருக்கு சிறை

இந்த திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.