மலேசியாவுக்கு வேலைக்குச் சென்ற தமிழருக்கு நேர்ந்த கொடூரம்!

மலேசியாவுக்கு வேலைக்குச் சென்ற தமிழருக்கு நேர்ந்த கொடூரம்!
File Photo

 

மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் பணத்துக்காக கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசடி, பணப்பறிப்பு, கொலை என அடுக்கடுக்கான குற்றங்களைக் கொண்ட இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.

ஆடவர் ஒருவரை காணவில்லை – பொங்கோல் நீரில் மூழ்கினாரா.. தொடரும் தேடுதல் வேட்டை

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விநாயகமூர்த்தி என்பவர், உள்ளூரில் சரியான வருமானம் இல்லாததால் குடும்ப வறுமைக் காரணமாக, வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல முடிவெடுத்தார். இதற்காக, ஒரு ஏஜெண்ட் மூலம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தைக் கட்டி நிரந்தர விசாவில், கடந்த ஆண்டு மலேசியாவுக்கு சென்றுள்ளார்.

மலேசியா சென்ற அவருக்கு பெரும் அதிர்ச்சிக் காத்திருந்தது. நிரந்தர விசா என ஏஜெண்ட் கூறிய நிலையில், அவர் தற்காலிக விசாவில் வந்திருப்பது தெரிய வந்தது. எனினும், குடும்ப சூழல் காரணமாக, மலேசியாவில் தங்கியிருந்து, இரும்புக் கடை நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்துள்ளார்.

இதனிடையே, மலேசியாவில் இருந்து விநாயக மூர்த்தியின் குடும்பத்தினரை வேலை செய்யும் கடையின் உரிமையாளர் தொடர்புக் கொண்டுள்ளார். உங்கள் மகனை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டுமானால், 10 லட்சம் ரூபாய் தர வேண்டுமென கூறியுள்ளார். இதற்கு விநாயக மூர்த்தியின் தந்தை அன்பழகன் தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என தனது நிலையை விளக்கி உள்ளார்.

Toto National Day Draw: வெறும் S$1 க்கு டிக்கெட் வாங்கி S$2.4 மில்லியன் பரிசைத் தட்டிச்சென்ற அதிஷ்டசாலி

மறுமுனையில் பேசிய நபர் பணத்தைப் பெறுவதில் கறாராக இருந்துள்ளார். வேறு வழியின்றி 7 லட்சம் ரூபாயைக் கொடுத்து தனது மகனை மீட்கும் முயற்சியில் இறங்கினார் அன்பழகன். திரைப்படப் பாணியில் 10 ரூபாய் நோட்டின் படத்தை அவருக்கு அனுப்பி வைத்த, அந்த மலேசிய முதலாளி இதனை கொண்டு வருபவரிடம் பணத்தை ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதைப் போலவே, கடந்த ஆகஸ்ட் 3- ஆம் தேதி அன்பழகன் வீட்டிற்கு வந்த நபர் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு, தனது அடையாள அட்டைகளைக் கொடுத்து விட்டு, பணத்தைப் பெற்று சென்றுள்ளார். பணத்தைக் கொடுத்துவிட்டதால், தனது மகன் இந்தியாவுக்கு வந்து விடுவார் என்ற நிம்மதியில் இருந்த அன்பழகனுக்கு தொலைபேசி மூலமாக, வந்தது அதிர்ச்சிகரமான செய்தி.

விநாயக மூர்த்தி கொலை செய்யப்பட்டு, உடல் சாக்குப்பையில் கட்டி, சாலையில் வீசப்பட்டிருப்பதாக அவரது உறவினர்கள் தகவல் அளித்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன விநாயக மூர்த்தியின் குடும்பத்தினர், பட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பைக், லாரி மோதி விபத்து: 23 வயது ஊழியர் மரணம்

பணத்துக்காக தனது மகனை அவர் பணி செய்த நிறுவனத்தின் உரிமையாளர் கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள அவரது தந்தை அன்பழகன், எப்படியாவது தனது மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கு காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.