சிங்கப்பூரில் குறைவான மழை… சில நாட்களில் வெப்பநிலை 34°C வரை எட்டக்கூடும்

Pic: Roslan RAHMAN/AFP

சிங்கப்பூரில் இந்த ஜனவரியில் குறைவான மழை நாட்களை எதிர்பார்க்கலாம் என சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் சில பகுதிகளில் ஓரிரு நாட்களின் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் குறுகிய நேரம் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்களின் FIN நம்பரை பயன்படுத்தி மோசடி… S$3,176 மதிப்புள்ள முகக்கவசங்களை பெற்றவருக்கு சிறை

இருப்பினும், ஜனவரி இரண்டாம் பாதியில் பொதுவாக வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரியின் ஒட்டுமொத்த மழைப்பொழிவு சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பெரும்பாலான நாட்களில் தினசரி வெப்பநிலை 24 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் எவ்வளவு தெளிவாக இருந்தாலும், இந்த வழியில் ஏமாற்றப்படலாம்… சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் உஷார்!