சிங்கப்பூரில் வெளியாகும் ‘ஜவான்’ திரைப்படம்- திரையரங்குகளின் பட்டியல்!

சிங்கப்பூரில் வெளியாகும் 'ஜவான்' திரைப்படம்- திரையரங்குகளின் பட்டியல்!
Video Crop Image

 

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் அட்லீ இயக்கத்தில், பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நாளை (செப்.07) வெளியாகவுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக ஜவான் உருவாக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நடந்த அதிரடி சோதனை.. 329 பேரிடம் போலீசார் விசாரணை

பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நகைச்சுவை நடிகர் யோகி பாபு மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு திரையரங்குகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரில் வெளியாகும் 'ஜவான்' திரைப்படம்- திரையரங்குகளின் பட்டியல்!
File Photo

குறிப்பாக, சிங்கப்பூரில் எந்தெந்த திரையரங்குகளில் ஜவான் திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறித்தும், எத்தனை திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

வெளிநாட்டு பணிப்பெண்ணை நாசம் செய்த சிங்கப்பூரருக்கு 15 ஆண்டுகள் சிறை

சிங்கப்பூரில் உள்ள GOLDEN VILLAGE, SHAW THEATRES, CARNIVAL CINEMAS, CATHAY CINEPLEXES ஆகிய திரையரங்க நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் 25- க்கும் மேற்பட்ட திரைகளில் ஜவான் திரைப்படம் வெளியாகவுள்ளது. எனினும், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் மட்டுமே சிங்கப்பூரில் ஜவான் திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.