சிங்கப்பூரில் நடந்த அதிரடி சோதனை.. 329 பேரிடம் போலீசார் விசாரணை

missing police looking
Photo: Singapore Police Force Official Twitter Page

சிங்கப்பூரில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய சந்தேகத்தில் 329 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு சுமார் 1,300 க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டு பணிப்பெண்ணை நாசம் செய்த சிங்கப்பூரருக்கு 15 ஆண்டுகள் சிறை

இந்த மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் $9.4 மில்லியனுக்கும் அதிகமாக தொகையை இழந்ததாகவும் கூறப்படுகிறது.

தீவு முழுவதும் இந்த அதிரடி சோதனை கடந்த ஆகஸ்ட் 18 முதல் 31 வரை நடந்துள்ளது.

இதில் 15 முதல் 70 வயதுக்குட்பட்ட 236 ஆண்களும் 93 பெண்களும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மின் வர்த்தகம், இணைய காதல், வாடகை மோசடி, முதலீடு, வேலைவாய்ப்புகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்தது போன்ற மோசடிகளில் அவர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் அனைவரும் விசாரணையில் உள்ளனர்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

ஊழியரின் திருமணத்துக்காக சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்த முதலாளி.. ஊழியர் படித்த பள்ளிக்கு முதலாளி கொடுத்த சர்ப்ரைஸ் – வியந்துபோன ஊர் மக்கள்