மார்ச் 22 முதல் ஜெட்ஸ்டார் விமானங்கள் சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையத்தில் இருந்து விமான சேவையை வழங்கும் என அறிவிப்பு!

Photo: Jetstar Asia

சாங்கி விமான நிலையத்தின் குழுமம் (Changi Airport Group) நேற்று (01/12/2022) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “ஜெட்ஸ்டார் ஏசியா (Jetstar Asia), ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways) ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்கள் அடுத்தாண்டு மார்ச் 22- ஆம் தேதி முதல் சாங்கி சர்வதேச விமான நிலையத்தின் (Changi International Airport) நான்காவது முனையத்தில் (Terminal 4) இருந்து விமான சேவையை வழங்கும்.

வெளிநாட்டிற்கு சென்றால் இவ்ளோ சம்பளம் கிடைக்கும் ! – தாய்நாடு இந்தியாவிற்கு பணப்பரிவர்த்தனை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள்!

அந்த வகையில், அடுத்தாண்டு மார்ச் மாதம் 22- ஆம் தேதி காலை 06.15 AM மணிக்கு ஜெட்ஸ்டார் ஆசியா நிறுவனத்தின் விமானம், சாங்கி சர்வதேச விமான நிலையத்தின் நான்காவது முனையத்தில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவிற்கு புறப்படும். அதேபோல், மணிலாவில் இருந்து புறப்படும் மற்றொரு ஜெட்ஸ்டார் ஆசியா விமானம், அதிகாலை 12.30 AM மணிக்கு சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையத்தை வந்தடையும்.

அடுத்தாண்டு மார்ச் மாதம் 22- ஆம் தேதி அன்று இரவு 10.10 PM மணிக்கு ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம், சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு புறப்படும். அதேபோல், மறுநாள் இரவு 08.10 PM மணிக்கு மெல்போர்னில் இருந்து புறப்படும் விமானம் சிங்கப்பூரை வந்தடையும்.

ஜெட்ஸ்டார் விமான சேவைகளை நான்காவது முனையத்திற்கு மாற்றிவிடுவது, அதிகரித்துள்ள விமானப் பயணங்களின் தேவையைச் சிறப்பாக கையாள உதவும்” என்று சாங்கி விமான நிலையக் குழுமம் குறிப்பிட்டுள்ளது.

ஒடிஷா மாநில முதலமைச்சருடன் சிங்கப்பூர் தூதர் சந்திப்பு!

ஜெட்ஸ்டார் விமான சேவைகள், விமான நிலையத்தின் முதல் முனையத்தில் இருந்து நான்காவது முனையத்திற்கு மாற்றப்படும் என கடந்த மாதம் சாங்கி விமான நிலையக் குழுமம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.