ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் உணவுகளை வாங்கிச் சாப்பிடுங்கள்….50 வெள்ளி மதிப்புள்ள வவுச்சரைப் பெறுங்கள்!

ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் உணவுகளை வாங்கிச் சாப்பிடுங்கள்....50 வெள்ளி மதிப்புள்ள வவுச்சரைப் பெறுங்கள்!
Photo: Jewel Changi Airport Official Facebook Page

 

சிங்கப்பூரில் உள்ள ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் (Jewel Changi Airport) பல்வேறு பொழுதுப்போக்கு வசதிகளுடனும், உலகின் மிக உயரமான உட்புற நீர்வீழ்ச்சியுடனும் அமைந்துள்ளது. குறிப்பாக, இயற்கை சூழலில் அமைந்திருப்பதால், சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், ஜுவல் விமான நிலையத்தின் கடைகளுக்கு சென்றும், பூங்காக்களுக்கு சென்றும், பொழுதுப்போக்கு அம்சங்களைச் சுற்றிப்பார்த்தும் மகிழ்ந்தனர்.

சாங்கி விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்!

உலகின் முன்னணி நிறுவனங்களின் துணிக்கடைகள், சாக்லெட்டுகளின் கடைகளும் அமைந்துள்ளது. இந்த நிலையில், ஜுவல் சாங்கி விமான நிலையம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ஜுவல் விமான நிலையத்தில் உள்ள உணவகங்களில் வித விதமான உணவுகளைச் சுவையுங்கள். அதற்கான கட்டணத்தை மாஸ்டர்கார்டு (MasterCard) மூலம் செலுத்தி, 50 வெள்ளி மதிப்புள்ள வவுச்சர்களை (Vouchers) பெற்றுக் கொள்ளலாம். எனினும், இந்த சலுகை விதிமுறைகளுக்கு உட்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் உணவுகளை வாங்கிச் சாப்பிடுங்கள்....50 வெள்ளி மதிப்புள்ள வவுச்சரைப் பெறுங்கள்!
Photo: Jewel Changi Airport

பாறையிலிருந்து தவறி விழுந்த சிங்கப்பூர் பெண் பலி.. 12 மணிநேரம் இடைவிடாது கதறி அழும் கணவர்

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வகையிலும் இந்த அறிவிப்பை ஜுவல் விமான நிலையம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.