ஜுவல் சாங்கியைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்த இளவரசர் வில்லியம்…. செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்!

ஜுவல் சாங்கியைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்த இளவரசர் வில்லியம்.... செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்!
Photo: The Prince and Princess of Wales

 

நான்கு நாள் பயணமாக பிரிட்டன் இளவரசர் வில்லியம், நேற்று (நவ.05) மாலை 05.00 மணியளவில் விமானம் மூலம் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் வந்தடைந்தார். இளவரசரை சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை மற்றும் தேசிய வளர்ச்சிக்கான மூத்த அமைச்சர் சிம் ஆன் வரவேற்றார்.

PM Lee: பொதுத் தேர்தலுக்கு முன்பே பிரதமர் பொறுப்பை ஒப்படைக்கவிருக்கும் பிரதமர் லீ

அதைத் தொடர்ந்து, மாலை 05.30 மணியளவில் ஜுவல் சாங்கி வந்த இளவரசருக்கு, சிங்கப்பூர் வாழ் பிரிட்டன் மக்கள் மற்றும் சிங்கப்பூர் மக்கள் கரவொலி எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன், இளவரசருடன் பொதுமக்கள் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்ததுடன், பரிசுகளையும் வழங்கினர். ஜுவலில் உள்ள உட்புற நீர்வீழ்ச்சியைப் பார்வையிட்ட இளவரசர், அருகில் உள்ள உட்புற தோட்டத்தில் பொதுமக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இளவரசர் வருகையையொட்டி, அங்கு நடப்பட்ட டெம்புசு மரத்தை ஜுவல் சாங்கி விமான நிலையத்தின் அதிகாரி, இளவரசரை அழைத்துச் சென்று காண்பித்தார். ஜுவல் சாங்கியை இளவரசர் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தார்.

சிங்கப்பூரின் வரலாற்று சிறப்புமிக்க தீமிதி திருவிழா இன்று…

நவம்பர் 08- ஆம் தேதி வரை சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோரை இளவரசர் வில்லியம் நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறார்.