வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: அதிக அளவில் ஊழியர்களை வேலைக்கு எடுக்க பேருந்து நிறுவனங்களுக்கு அனுமதி

Job hire more foreign workers School bus operators spore
(Photo: Overseas Foreign Workers in Singapore/FB)

பள்ளி பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மனிதவள நெருக்கடி காரணமாக ஒப்பந்தங்களை கைவிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சில நிறுவனங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியதற்கு உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை, தள்ளுபடி, குறைந்த விலையில் சேவை – அதிரடி அறிவிப்பு

பள்ளி பேருந்து நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கல்வி அமைச்சகம் (MOE) நேற்று (ஜூன் 12) இந்த அறிவிப்பை வெளியிட்டது.

நிறுவனங்கள், வெளிநாட்டு ஊழியர்கள் வேண்டி கல்வி அமைச்சகத்திடம் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

வரையறுக்கப்பட்ட நேரம் அடிப்படையில் அதிக வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க அமைச்சு அனுமதி வழங்கும்.

எகிறும் செலவுகள் காரணமாக பேருந்து நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்தங்களை சமீபத்தில் ரத்து செய்து வருகின்றன. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகின்றன.

எனவே, குறிப்பிட்ட பேருந்து நிறுவனங்களுக்கு அதிக அளவில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க அனுமதி வழங்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

தங்க கைச்செயினை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்த நபர் – அடகு கடையில் கைவரிசை: CCTV காட்சிகளை வைத்து தூக்கிய போலீஸ்