சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியதற்கு உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை, தள்ளுபடி, குறைந்த விலையில் சேவை – அதிரடி அறிவிப்பு

Budget 2024 foreign workers
Pic: AFP

சிங்கப்பூரில் வேலைசெய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கட்டண தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகையும் வழங்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியதற்கு உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன் உறுப்பில் கை வைத்து பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வெளிநாட்டு நபர் கைது

மலிவான கட்டணத்தில் பல் மருத்துவச் சேவை

ஊழியர்களின் விலைமதிப்பற்ற சிரிப்பை மேலும் அழகாக்க மலிவான கட்டணத்தில் பல் மருத்துவச் சேவை வழங்கப்படவுள்ளன.

MWAF என்னும் வெளிநாட்டு உதவி திட்டத்தின் மூலம் ஆறு ஆண்டுகளுக்கு S$3 மில்லியன் நன்கொடை அதற்காக வழங்கப்படும்.

4,000 புலம்பெயர்ந்த ஊழியர்கள்

இதனால் ஆண்டுக்கு 4,000 புலம்பெயர்ந்த ஊழியர்கள் பல்மருத்துவ சேவைகளை சிறந்த முறையில் பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலமாக வெளிநாட்டு ஊழியர்கள், பல் மருத்துவ சேவைகளுக்கு கட்டணமாக $30 செலுத்தினால் போதும்.

மேலும், MWC உறுப்பினர்களுக்கு $5 தள்ளுபடியும் வழங்கப்படும்.

இதனால், ஊழியர்களை MWC உறுப்பினர்களாக பதிவு செய்ய வலியுறுத்தப்படுகிறார்கள்.

மே தின நிகழ்ச்சி

சுமார் 8,000 க்கும் அதிகமான ஊழியர்கள் கலந்துகொண்ட மே தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது, இதில் கலந்துகொண்டு விளையாடி மகிழ்ந்த ஊழியர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

மேலும் சலுகை விலையில் telco packages என்னும் தொலைத் தொடர்பு சேவைகளுக்கும் ஊழியர்கள் பதிந்துகொண்டனர்.

கூடுதலாக மனநலம், பயிற்சி வழியாக வழங்கப்படும் சிகிச்சை திட்டத்தை விரிப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூருக்கு மட்டும்: புதிய சிறப்பு அம்சங்களுடன் WhatsApp அப்டேட்