உஷார்! – சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி ஏமாந்த இந்தியாவைச் சேர்ந்த நபர்

job offer in singapore scam india noida

இந்தியாவின் Noida-வில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் 40 வயது நிரம்பிய பொறியாளரிடம் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துள்ளனர். சிங்கப்பூரில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையை பெறுவதற்கு ஆன்லைன் போர்டல் மூலம் முயன்றபோது ரூ.22 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐந்து மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் போர்ட்டலில் வேலைக்காக விண்ணப்பித்த பொறியாளர் நரேந்திர ஷெண்டே வேலைவாய்ப்பிற்காக சிங்கப்பூரில் முயற்சி செய்துள்ளார். ஜனவரி மாதம் கார்த்திக் பாலசந்திரன் என்பவர் நரேந்திரனிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வேலைக்கான இணையதளத்துடன் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டுள்ளார்.

முதல் அழைப்பில் நரேந்திரனின் சம்பள எதிர்பார்ப்பு குறித்து கேட்டறிந்து ,பின்னர் பதிவுக் கட்டணமாக ரூ.4200 செலுத்திய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் தொடங்குமாறு கூறியுள்ளார். மேலும் மூன்று சுற்று நேர்காணலுக்கு வீடியோ அழைப்பில் பங்கேற்குமாறு நரேந்திரனிடம் கூறியுள்ளார்.

ஜனவரி 22ஆம் தேதி மின்னஞ்சல் முகவரிக்கு நிறுவனத்தின் சலுகை கடிதம் வந்ததாக கூறிய நரேந்திரன் ,சிங்கப்பூரில் பணி அனுமதி, வங்கி உத்தரவாதம் மற்றும் விசா கட்டணமாக சுமார் 18 லட்சத்தை அவர்களுக்கு செலுத்தியுள்ளார்.ஏப்ரல் தொடக்கத்தில் ஜிஎஸ்டி அனுமதி மற்றும் விசா ஸ்டாம்பிங் தொடர்பான மெயில் சிங்கப்பூர் தூதரகத்திலிருந்து வந்ததாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

தனது சம்பாத்தியத்தில் எட்டு லட்சத்தையும் ,வங்கியில் கடனாக பெற்ற 14 லட்சத்தையும் ,வேலையை பெறுவதற்கு செலவழித்ததாக தெரிவித்தார்.பேராசையில் பெரும் கஷ்டங்கள் ஏற்படுவதை புத்திக் கூர்மையுடன் செயல்பட்டு தவிர்த்துக் கொள்வது சிறந்தது என்பதை இந்நிகழ்வின் மூலம் அறிந்து எச்சரிக்கையாக செயல்படுவது சிறந்த