சிங்கப்பூரில் மிகவும் அதிகரித்த வேலை காலியிடங்கள் – வெளிநாட்டு ஊழியர்களுக்கான எல்லைக் கட்டுப்பாடுகள் காரணம்

(AFP/Roslan RAHMAN)

சிங்கப்பூரில் வேலை காலியிடங்களை கடந்த செப்டம்பர் மாதத்தில் மிக அதிகமான 98,700 ஆக உயர்ந்துள்ளதாக இன்று (டிசம்பர் 15) மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

அதாவது, எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் மனிதவளத் தேவை ஆகியவை வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் MOM கூறியுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகளில் 2 சதவீதம் பேர் PCR சோதனைக்காக தேர்ந்தெடுப்பு

இந்த ஆண்டு ஜூன் மாதம் பதிவான 92,100 வேலை காலியிடங்களிலிருந்து இது மிக அதிகமான உயர்வாகும்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் 100 வேலையில்லாத நபர்களுக்கு 209 வேலை வாய்ப்புகள் இருந்தன, இது ஜூன் மாதத்தில் 163ஆக இருந்தது.

கடந்த இருபது ஆண்டுகளில் முதல் முறையாக வேலைவாய்ப்பற்றோருக்கான வேலை காலியிடங்களின் விகிதம் இரண்டுக்கு மேல் உயர்ந்துள்ளது. இவை பருவகாலமாக சூழலுக்கு ஏற்ற புள்ளிவிவரங்கள்.

வெளிநாட்டு ஊழியர்களின் வரவைக் கட்டுப்படுத்திய எல்லைக் கட்டுப்பாடுகளால் காலிப் பணியிடங்கள் அதிகரித்தன என்று MOM கூறியுள்ளது.

மொத்த வேலையின்மை (புலம்பெயர்ந்த வீட்டுப் பணிப்பெண்களை தவிர) டிசம்பர் 2019 முதல் 173,100 ஆகக் குறைந்துள்ளது.

இரும்புக் கம்பி மொத்தமாக விழுந்ததில் உடல் நசுங்கி வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்!