சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகளில் 2 சதவீதம் பேர் PCR சோதனைக்காக தேர்ந்தெடுப்பு

Photo: Lonely Planet

சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகளில் 2 சதவீதம் பேர் தற்போது PCR சோதனைக்காக முன் அறிவிப்பு இன்றி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாக, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகள் இந்தியாவுக்கு சுதந்திரமாக பயணிக்க முடியும்.

இரும்புக் கம்பி மொத்தமாக விழுந்ததில் உடல் நசுங்கி வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்!

இருப்பினும், சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகள் 14 நாட்களுக்கு தங்கள் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும்.

கூடுதலாக, பயணிகள் இந்திய விமான நிலையத்திற்கு வந்தவுடன், அவர்களில் இரண்டு சதவீதத்தினரின் மாதிரி PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று இந்திய ஊடகங்கள் மேற்கோள் காட்டியுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இணையதளத்திலும் இந்த தோராயமான சோதனை முறை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்தியாவில் நுழைவுத் தேவைகளை எளிதாக்குவதை வரவேற்பதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.

அனைத்து வாடிக்கையாளர்களும் விமானத்தில் பயணிப்பதற்கு முன் தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த பயணிக்கு கிருமித்தொற்று உறுதி – சென்னைக்கு மாதிரி அனுப்பி வைப்பு