அதிகமான “ஒர்க் பெர்மிட்” ஊழியர்கள் வேலையை விட்டு சென்றதால், கட்டுமான துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு!

workplace injury compensation-limits update mom
(Photo by Roslan RAHMAN / AFP)

வெளிநாட்டு ஊழியர்களின் வரவைக் கட்டுப்படுத்திய எல்லைக் கட்டுப்பாடுகளால் காலிப் பணியிடங்கள் அதிகரித்தன என்று மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

மொத்த வேலையின்மை (புலம்பெயர்ந்த வீட்டுப் பணிப்பெண்களை தவிர) டிசம்பர் 2019 முதல் 173,100 ஆகக் குறைந்துள்ளது.

சிங்கப்பூரில் மிகவும் அதிகரித்த வேலை காலியிடங்கள் – வெளிநாட்டு ஊழியர்களுக்கான எல்லைக் கட்டுப்பாடுகள் காரணம்

குறிப்பாக, ஒர்க் பெர்மிட் (work permit) வைத்திருக்கும் பெரும் அளவிலான ஊழியர்கள் வேலையை விட்டு சென்றதால், உற்பத்தி, கட்டுமானம், உணவு மற்றும் பான சேவைகள் மற்றும் நிர்வாக மற்றும் ஆதரவு சேவைகள் போன்ற துறைகளில் காலிப் பணியிடங்கள் அதிகரித்தன.

அனைத்து வேலை காலியிடங்களுடன் ஒப்பிடுகையில் மேற்கண்ட அந்தத் துறைகளில் மட்டும் 38 சதவீத காலியிடங்கள் உள்ளன.

“எல்லை கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை, வேலை காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் வேலையில்லாத நபர்களுக்கான வேலை காலியிடங்களின் விகிதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”

இதனை மனிதவள அமைச்சகம் தனது மூன்றாம் காலாண்டு தொழிலாளர் சந்தை அறிக்கையில் இன்று (டிச.15) தெரிவித்துள்ளது.

மென்பொருள், வெப் மற்றும் மல்டிமீடியா டெவலப்பர்கள், கணினி ஆய்வாளர்கள், வணிக மற்றும் சந்தைப்படுத்தல் விற்பனை நிர்வாகிகள், கணக்காளர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரின் தேவைகளும் அதிகரித்துள்ளன.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகளில் 2 சதவீதம் பேர் PCR சோதனைக்காக தேர்ந்தெடுப்பு