“உழைப்புக்கு ஏற்ற கூலி முக்கியம்ங்க..” – கடமைக்கு வேலை செய்யும் ஊழியர்கள் சிங்கப்பூரில் தான் அதிகமாம்

Singapore oct changes jobs workers electricity
Pic: Julio Etchart

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் ஊழியர்கள் பெரும்பாலும் ஆர்வம் இல்லாமல் கடமைக்கு வேலைசெய்வதாக கூறப்பட்டுள்ளது.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் பொடுபோக்கு ஊழியர்களின் எண்ணிக்கை சிங்கப்பூரில் தான் அதிகம் எனவும் சொல்லப்படுகிறது.

இந்தியாவில் தங்கம் போல் எகிறும் தக்காளி விலை… சிங்கப்பூரில் பாதிப்பு இருக்குமா? – லிட்டில் இந்தியாவில் நிலை என்ன?

எவ்வளவு ஆர்வமாக உழைத்தாலும் சம்பளம் முக்கியம், உழைப்புக்கு ஏற்ற கூலி இல்லை என்றால் எந்த வேலையாக இருந்தாலும் அதில் ஈடுபாடு குறைவாக தான் இருக்கும்.

இந்த கருத்தை தான் பலர் முன் வைக்கின்றனர், நாங்கள் ஆர்வமுடன் தான் வேலை பார்த்தோம் ஆனால் அதே வேலையை செய்யும் சக ஊழியருக்கு சம்பளம் அதிகம் என்று கூறுகின்றனர்.

இதன் காரணமாக எங்களுக்கு வேலையின் மீதான ஆர்வம் குறைந்து, ஏனோ தானோ என்று வேலை பார்ப்பதாக கூறினர்.

ஆசிரியர் ஒருவர் இது குறித்து கூறுகையில், முதலில் தாம் ஆர்வமாக வேலை பார்த்ததாகவும், ஆனால் என் சக ஊழியருக்கு என்னை விட சம்பளம் அதிகம் என்பதை அறிந்து கவலை கொண்டதாக குறிப்பிட்டார்.

அதனால், அதிக வேலை செய்வதில்லை என்றும், உற்சாகத்துடன் பாடங்களை எடுப்பதில்லை என்றும் அவர் சொன்னார்.

“ரேன்ஸ்டாட்” என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், “சிங்கப்பூரில் 18 முதல் 67 வயது வரையுள்ள 35% ஊழியர்கள் வேலையில் ஆர்வம் மற்றும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதாக தெரியவந்தது.

உலக அளவில் இந்த புள்ளிவிவரத்தை ஒப்புநோக்கையில், சிங்கப்பூரில் 4 சதவீதம் அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

இரும்பு கட்டமைப்பு விழுந்து இந்திய ஊழியர் மரணம்: கட்டமைப்பு எடை 560கி… நிறுவனத்துக்கு செக்