ஊழியர்களை வேலை விட்டு நீக்கும் நிறுவனங்கள் – தொடரும் ஆட்குறைப்பு

job Singapore cut
Photo: Singapore Minister S.Iswaran Official Facebook Page

ஊழியர்களை வேலை விட்டு நீக்கம் செய்யவுள்ளதாக சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூரில் உள்ள தனது ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக Standard Chartered வங்கி அறிவித்துள்ளது. அதோடு சேர்த்து லண்டன் மற்றும் ஹாங்காங் நகரங்களிலும் ஆட்குறைப்பு நடைபெற உள்ளது.

வெளிநாட்டு ஊழியருக்கு சிறை.. பெண்ணுக்காக 3 ஊழியர்கள் இடையே பொது இடத்தில் கைகலப்பு

அந்நிறுவனம் அதன் செலவுகளை சுமார் 1 மில்லியன் டாலருக்கு மேல் அடுத்த ஆண்டு குறைக்க வேண்டும் என இலக்கு கொண்டுள்ளது. இதனால் அந்த ஆட்குறைப்பு நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்படலாம், சரியாக எவ்வளவு ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவர் என்ற தகவல் வெளியாகவில்லை.

மனிதவளம் மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் போன்ற துறைகளில் ஆட்குறைப்பு கடந்த வாரம் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அதே போல Goldman Sachs நிறுவனம் அதன் ஊழியர்கள் சுமார் 250 பேரை வலையை விட்டு நீக்குகிறது, இது வரும் வாரங்களில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதே போல Singapore Turf club மூடப்படவுள்ளதாகவும், அதன் ஊழியர்கள் 350 பேர் படிப்படியாக வேலையை விட்டு நீக்கப்படுவர் என்ற அறிவிப்பும் முன்னர் வெளியானது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

“வேலையை விட்டு தூக்க போறோம்..” – செய்தி அறிந்து கண்ணீர் வடித்த ஊழியர்கள்