ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை அள்ளிக்கொடுக்கும் நாடுகள் – சிங்கப்பூர் உட்பட 10 நாடுகள் லிஸ்ட்

Singapore Shell companies linked money laundering operation India

உள்நாட்டில் வேலை செய்தால் போதுமான வருமானம் இருக்காது என்றும், சொந்த வீடு கட்டி நாமும் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்று வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் இளைஞர்கள் அதிகம்.

அதிலும் தமிழக இளைஞர்கள் அதிகமானோர் குறிப்பாக சிங்கப்பூரை தேர்ந்தெடுப்பது வழக்கம்.

போதைப்பொருள் கடத்தல்… 39 வயதான ஆடவருக்கு மரண தண்டனை – சிங்கப்பூர் கோர்ட் அதிரடி

அது ஒருபுறம் இருக்க எந்த நாட்டில் சம்பளம் அதிகம் வழங்கப்படுகிறது என்ற கேள்வி நமக்கு எழுந்து கொண்டே இருக்கும்.

அது பற்றிய ஒரு புள்ளிவிவரத்தை சர்வதேச புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது சராசரியாக மாத சம்பளம் அதிகம் வழங்கும் 23 நாடுகளின் பட்டியலை அது வெளியிட்டுள்ளது.

அந்த 23 நாடுகளில் மாத சராசரி சம்பளம் 1 லட்சத்துக்கும் அதிகம் என்று சொல்லப்பட்டுள்ளது.

அதில் முதலிடத்தில் சுவிட்சர்லாந்து உள்ளது, அங்கு சராசரி மாதாந்திர சம்பளம் இந்திய மதிப்பில் ரூ.5,03,335 என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

இரண்டாம் இடத்தில் லக்சம்பர்க் உள்ளது, அங்கு சராசரி மாதாந்திர சம்பளம் ரூ.4,14,121 ஆகும்.

மூன்றாம் இடத்தில் சிங்கப்பூர் உள்ளது, இங்கு சராசரி மாத சம்பளம் ரூ.4,11,924 என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்த பட்டியலில் அடுத்ததடுத்த இடங்களை அமெரிக்கா, ஐஸ்லாந்து, கத்தார், டென்மார்க், UAE, டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை பிடித்துள்ளன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

துவாஸில் விபத்து: 32 வயதுமிக்க ஆடவர் மரணம்