காண்டாமிருக வளாகத்துக்குள் குதித்து “டிக்டாக்” – நீதிமன்றத்திற்கு செல்லாமல் தூங்கிய ஆடவருக்கு கைது உத்தரவு

Police investigating Zoo TikTok
Police investigating Zoo TikTok (Photo: Tiktok Screengrab)

சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலையின் உள்ள வெள்ளை காண்டாமிருக வளாகத்துக்குள் ஆடவர் ஒருவர் அத்துமீறி நுழைந்து டிக்டாக் செய்த சம்பவம் குறித்து முன்னர் நாம் பதிவிட்டு இருந்தோம்.

தற்போது 19 வயதான Ralph Wee Yi Kai என்ற அந்த ஆடவர் நேற்று நவம்பர் 5, வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றத்திற்குச் செல்லத் தவறியதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் 100,000 ஊழியர்களுக்கு S$4,000 பண அன்பளிப்பு – சுகாதார அமைச்சர்

அவர் இல்லாமல் ஆஜரான அவரது தரப்பு வழக்கறிஞர் சசி நாதன், ஆடவரை தூக்கத்தில் இருந்து எழுப்புவதில் சிரமம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அவரின் பெற்றோர்கள் தங்கள் மகனை எழுப்ப முயன்றும் அவர் எழும்பவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஆடவரை காவலில் எடுக்க, கைது உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிபதியிடம் நாதன் வலியுறுத்தினார்.

நீதிபதி கைது உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாமீன் மறுபரிசீலனைக்காக மாவட்ட நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும். அவர் தற்போது ஆறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

சிங்கப்பூரில் வேலை என்றதும் மயங்கிய வாலிபர் – சுமார் 3.5 லட்சம் ரூபாய் பறிபோன சோகம்