சிங்கப்பூர் வெள்ளை காண்டாமிருக வளாகத்துக்குள் குதித்து “டிக்டாக்”- காவல்துறை விசாரணை!

Police investigating Zoo TikTok
Police investigating Zoo TikTok (Photo: Tiktok Screengrab)

சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலையின் உள்ள வெள்ளை காண்டாமிருக வளாகத்துக்குள் ஆடவர் ஒருவர் அத்துமீறி நுழைந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

டிக்டாக் பயனர் ralphwee_ என்பவரின் கணக்கில் பதிவேற்றப்பட்ட காணொளியில், முகக்கவசம் அணிந்த அவர் மிருகக்காட்சிசாலையின் டிராம் வண்டிகளில் இருப்பதை காட்டுகிறது.

“வெளிநாட்டு ஊழியர்களின் நம்பிக்கை, பொறுமை மற்றும் ஆதரவுக்கு நன்றி” – பிரதமர் லீ

அவர், பின்னர் இரண்டு வெள்ளை காண்டாமிருகம் இருந்த அடைப்பு வளாகத்துக்குள் காணப்படுகிறார். அதற்குள் கரணம் அடித்து பின்னர் வேலியை தாண்டி வெளியே வருகிறார்.

சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் (WRS) தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில், இந்த காணொளியை பற்றி அறிந்திருப்பதாகக் கூறியுள்ளது.

இது ஒரு பொறுப்பற்ற செயல், மேலும் மிகவும் ஆபத்தானதும் கூட, இது வனவிலங்குகளுக்கும் அவமரியாதை ஏற்படுத்தும் செயல் என்றும் WRS கூறியுள்ளது.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை (டிசம்பர் 17) இந்த சம்பவம் நடந்ததாகவும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் பரிந்துரைத்ததாகவும் WRS கூறியுள்ளது.

புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தினர், மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினர்.

அடுத்த ஆண்டுக்கான இந்தியா-சிங்கப்பூர் விமானச் சேவை: முன்பதிவு துவக்கம்!

மேலும் 4 இடங்களுக்கு விமானங்களை மீண்டும் தொடங்க உள்ள SIA!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…