மேலும் 4 இடங்களுக்கு விமானங்களை மீண்டும் தொடங்க உள்ள SIA!

PHOTO: Reuters

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், அடுத்த மாதம் முதல் மேலும் 4 இடங்களுக்கு விமானங்களை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் துபாய், டோக்கியோவின் Haneda விமான நிலையம், மாஸ்கோ (Moscow) மற்றும் முனிச் (Munich) ஆகிய நகரங்களுக்கு விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் என்று அது இன்று (டிசம்பர் 18) தெரிவித்துள்ளது.

காட்டு சரிவில் கீழே விழுந்த சைக்கிள் ஓட்டுநர் – குடிமை பாதுகாப்பு படை உதவி..!

அதே போல, ஜனவரி முதல் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள பல இடங்களுக்கு தற்போதுள்ள விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் பதிவில், சில்க்ஏர் (SilkAir) மற்றும் ஸ்கூட்டில் (Scoot) விமான அட்டவணைகளிலும் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

குழு பயணிகள் திறன் அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள், அதன் COVID-19க்கு முந்தைய நிலைகளில் சுமார் 25 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இந்திய நாட்டவர்க்கு சிறை, பிரம்படிகள்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…