பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இந்திய நாட்டவர்க்கு சிறை, பிரம்படிகள்!

Photo: Getty

இந்தோனேசிய பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக இந்திய நாட்டை சேர்ந்தவர்க்கு கடந்த டிசம்பர் 15 அன்று இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இரண்டு பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நிரந்தரவாசி, 44 வயதான இந்திய நாட்டைச் சேர்ந்த சேது செல்வராஜ், கடந்த ஆண்டு ஜூன் 6ஆம் தேதி இரவு 8 மணியளவில் புக்கிட் பஞ்சாங் காபி கடையில் 37 வயதான பெண்ணைக் கண்டார்.

Lazada மலிவு விற்பனை: S$5 மட்டுமே செலவிட்டு S$179,000 காரை தட்டி சென்ற வாடிக்கையாளர்!

சேது அவருடன் நட்பு கொள்ள முயன்றபோது, அந்த பெண் பெடிர் சாலையில் உள்ள தனது முதலாளியின் பிளாட்டுக்கு திரும்பி நடந்து கொண்டிருந்தார்.

மேலும், அவர் அந்த பெண்ணை பின்தொடர்ந்து கொண்டே, ​​அவரது பெயர் மற்றும் மொபைல் தொலைபேசி எண்ணைக் சேது கேட்டார் என்று துணை அரசு வக்கீல் ஷானா பூன் கூறியுள்ளார்.

அந்த பெண் அவரிடம் தனது பெயரைச் சொல்லி, மொபைல் போன் இல்லை என்றும் கூறியுள்ளார். பின்னர் அவர் தனது முதலாளியின் இல்லத்திற்குத் தொடர்ந்து நடந்து சென்றார்.

பணிப்பெண் முதலாளி பிளாட்டுக்கு சென்றதும், சேது அவரது வலது கையைப் பிடித்து, தொடர்ந்து செல்ல விடாமல் தடுத்ததாகவும், பின்னர் பணிப்பெண் அவரை மீறி படிக்கட்டில் ஓடியதாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னரும், சேது அந்த பெண்ணைத் துரத்திச் சென்று, முதல் மற்றும் இரண்டாவது மாடிகளுக்கு இடையில் பின்னால் இருந்து பலவந்தமாக பணிப்பெண்ணை கட்டிப்பிடித்ததாக கூறப்படுகிறது.

பயந்துபோன பணிப்பெண், உதவிக்காக கூச்சலிட தொடங்கியுள்ளார், சத்தம் கேட்டு மூத்த காவலர் ஒருவர் படிக்கட்டுகளில் ஏறி அவர்களை பார்த்தார்.

அதன் பின்னர் சேது கைது செய்யப்பட்டார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில், சர்க்யூட் பிரேக்கர் நடப்பில் இருந்த காலத்தில் சட்டவிரோதமாக தனது வீட்டை விட்டு வெளியேறி குற்றத்திற்காக ஆகஸ்டில் 13 வார சிறைத்தண்டனை சேதுக்கு விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் 3ஆம் கட்டம்: COVID-19 சோதனைக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…