சிங்கப்பூரின் 3ஆம் கட்டம்: COVID-19 சோதனைக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு..!

(Photo: Raffles Medical Group)

சிங்கப்பூரின் 3ஆம் கட்டம் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், COVID-19 சோதனைக்கான தேவை அதிகரிக்கும் என்பதால் சுகாதார வழங்குநர்கள் மற்றும் பொது பயிற்சியாளர் கிளினிக்குகள் அதற்காக தயாராகி வருகின்றன.

COVID-19 பரிசோதனை வழங்கும் புல்லர்டன் ஹெல்த் (Fullerton Health) நிறுவனம், நிகழ்ச்சிகள் மற்றும் வேலையிடத்திற்குத் திரும்பும் மக்களிடம் கூடுதல் சோதனை வரும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு இல்லாமல் 6வது மாடி ஜன்னல் விளிம்பில் அமர்ந்து AC பொருந்தும் ஊழியர்…மனிதவள அமைச்சகம் விசாரணை!

வேலைக்குத் திரும்புதல், முக்கிய கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்காக ஊழியர்களுக்கு சோதனை மேற்கொள்ள, தனியார் துறையிலிருந்து அதிக கோரிக்கை வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று புல்லர்டன் ஹெல்த் முதன்மை பராமரிப்பு பிரிவின் மருத்துவ இயக்குனர் டாக்டர் பைசல் காசிம் கூறியுள்ளார்.

போக்குவரத்து மற்றும் நடத்துனர் தொழில்களில் உள்ள முக்கிய வாடிக்கையாளர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக சிங்கப்பூர் அதன் நடவடிக்கைகளை அதிகமாக்கும் வேளையில், COVID-19 சோதனைக்கு அதிக தேவை இருக்கும் என்று கிளினிக்குகள் எதிர்பார்க்கின்றன.

திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் – 4 பேர் கைது!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…