பாதுகாப்பு இல்லாமல் 6வது மாடி ஜன்னல் விளிம்பில் அமர்ந்து AC பொருந்தும் ஊழியர்…மனிதவள அமைச்சகம் விசாரணை!

MOM investigating worker sitting ledge
MOM investigating after worker seen sitting dangerously on ledge (PHOTO: Stomp)

சிங்கப்பூர், பிளாக் 834 உட்லேண்ட்ஸ் ஸ்ட்ரீட் 83இன் ஆறாவது மாடியில் ஜன்னல் விளிம்பில் அமர்ந்துகொண்டு ஊழியர் ஒருவர், குளிர்சாதன பெட்டியை நிறுவுவதாகத் தெரிகிறது.

இந்த சம்பவம் பற்றி விசாரிப்பதாக மனிதவள அமைச்சு (MOM) தெரிவித்துள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் – 4 பேர் கைது!

ஸ்டோம்பர் சைமன் கடந்த திங்களன்று (டிசம்பர் 14) காலை 11 மணியளவில் அந்த ஊழியர் ஜன்னல் விளிம்பில் அமர்ந்து இருப்பதை பார்த்ததாகவும், ஊழியரின் பாதுகாப்பு குறித்து கவலை அடைந்த அவர் அதனை பகிர்ந்து கொண்டதாகவும் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பாதுகாப்பு ஏதும் இல்லாமல், AC நிறுவுவதை நான் கண்டது இதுவே முதல் முறை என்று குறிப்பிட்டுள்ளார்.

(PHOTO: Stomp)

இந்த செயல் மிகவும் ஆபத்தானது, மேலும் ஊழியர் ஆறாவது மாடியில் இருந்தார், அங்கிருந்து விழுந்தால் என்ன செய்வது ? என்று கவலையுடன் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிவதாக கூறிய மனிதவள அமைச்சு, விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

SnapSAFE மொபைல் செயலி மூலம் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரச்சினைகள் குறித்து புகாரளிக்கலாம் என்று பொதுமக்களை MOM கேட்டுக்கொண்டது.

சிங்கப்பூரில் புதிதாக 24 பேருக்கு கிருமித்தொற்று!

சிங்கப்பூரின் மொத்த வேலைவாய்ப்புகளில் 10ல் ஒன்பது பேர் வெளிநாட்டினர்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…