சிங்கப்பூரில் புதிதாக 24 பேருக்கு கிருமித்தொற்று!

(PHOTO: Reuters)

சிங்கப்பூரில் இன்றைய (டிச.17) நிலவரப்படி, புதிதாக 24 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

புதிய சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்று MOH கூறியுள்ளது.

சிங்கப்பூரின் மொத்த வேலைவாய்ப்புகளில் 10ல் ஒன்பது பேர் வெளிநாட்டினர்!

கடந்த செப்டம்பர் 29ஆம் தேதியில் இருந்து பதிவான மிக அதிக COVID-19 தினசரி எண்ணிக்கை இது ஆகும்.

தனிமை

அவர்கள் இங்கு வந்ததில் இருந்து வீட்டில் தங்கும் கட்டாய அறிவிப்பின்கீழ் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சமூக பரவல்

புதிய பாதிப்புகளில் யாரும் சமூக அளவில் பாதிக்கப்படவில்லை என்று MOH குறிப்பிட்டுள்ளது.

தங்கும் விடுதி

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் யாரும் புதிதாக கிருமித்தொற்றால் பாதிக்கவில்லை என்றும் MOH கூறியுள்ளது.

மொத்த பாதிப்பு

இந்த புதிய பாதிப்புகளுடன் சேர்த்து, சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 58,377ஆக உள்ளது.

மேலும் விவரங்கள் இன்று இரவு வெளியிடப்படும் என்று MOH தெரிவித்துள்ளது.

இயந்திரங்களிலிருந்து சட்டவிரோதமாக முகக்கவசங்களை பெற்ற சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…