காட்டு சரிவில் கீழே விழுந்த சைக்கிள் ஓட்டுநர் – குடிமை பாதுகாப்பு படை உதவி..!

Cyclist falls down forest
Cyclist falls down forest slope (PHOTO: Roads.sg)

பால் பண்ணை இயற்கை பூங்காவில் ரோந்து சென்ற பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்கள், அந்த காட்டு சரிவில் கீழே விழுந்த சைக்கிள் ஓட்டுநர் ஒருவரை கண்டுபிடித்தனர்.

இந்த சம்பவம் குறித்த விவரங்களை பாதுகாப்பு நிறுவனம் முதலில் பேஸ்புக்கில் பகிர்ந்து, பின்னர் அதை நீக்கியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இந்திய நாட்டவர்க்கு சிறை, பிரம்படிகள்!

பாதுகாப்பு ஊழியர்கள் சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படையினரை தொடர்பு கொண்டதாக Lianhe Wanbao தெரிவித்துள்ளது, ஆனால் வாயில்கள் பூட்டி இருந்ததால் அவர்களால் பூங்காவிற்குள் நுழைய முடியவில்லை.

பின்னர், குடிமை பாதுகாப்பு படையினர் உள்ளே நுழைந்து அந்த நபரை இரவு நேரத்திற்கு முன்னர் மீட்டனர், அப்போது அவர் சுயநினைவுடன் இருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 13, ஞாயிற்றுக்கிழமை புக்கிட் திமா நேச்சர் ரிசர்வ் பகுதியில் நடந்துள்ளது.

அந்த ஆடவர் தனியாக சைக்கிள் ஒட்டி சென்றதாக முதலில் நம்பப்பட்டது. இருப்பினும், அவர் தனியாக இல்லை என்று பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது.

சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்ததாகவும், ஆனால் இப்போது குணமடைந்து வருகிறார் என்றும் அந்த பதிவு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Lazada மலிவு விற்பனை: S$5 மட்டுமே செலவிட்டு S$179,000 காரை தட்டி சென்ற வாடிக்கையாளர்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…