“வெளிநாட்டு ஊழியர்களின் நம்பிக்கை, பொறுமை மற்றும் ஆதரவுக்கு நன்றி” – பிரதமர் லீ

PM Lee thanks migrant workers
PM Lee thanks migrant workers (Photo: AP)

ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்னர் சிங்கப்பூர் தனது முதல் COVID-19 சம்பவத்தை கண்டறிந்து, அதன் பின்னர் கடினமான காலத்தை கடந்து வந்த போதிலும், வெளிநாட்டு ஊழியர்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு பிரதமர் லீ சியென் லூங் இன்று நன்றி தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்கள் தற்போது ஆரோக்கியமாகவும் தொற்றிலிருந்து பாதுகாப்பாகவும் உள்ளனர் என்று பிரதமர் லீ சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தில் காணொளி செய்தியில் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டுக்கான இந்தியா-சிங்கப்பூர் விமானச் சேவை: முன்பதிவு துவக்கம்!

பெரும்பாலும் தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள், மற்ற சிங்கப்பூரர்களைப் போலவே இங்கு பாதுகாக்கப்படுவார்கள் என்று லீ உறுதியளித்தார்.

“நீங்கள் (வெளிநாட்டு ஊழியர்கள்) நோய்வாய்ப்பட்டால், உங்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்வோம், உங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருங்கள், விரைவில் நீங்கள் வேலைக்கு திரும்ப முடியும்” என்று அவர் உறுதியளித்தார்.

வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரின் கடல் மற்றும் கட்டுமானத் துறைகளில் முக்கிய ஆதாரமாக உள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.

இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்கள் இந்த கடினமான காலம் மற்றும் COVID-19 தொற்றுநோயைக் கடந்த போதிலும் அவர்களின் நம்பிக்கை, பொறுமை மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

COVID-19 பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறையில் உள்ள விதிகள், படிப்படியாக வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் தளர்த்தப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

பொழுதுபோக்கு நிலையங்களை பார்வையிடுவதைத் தவிர, வெளிநாட்டு ஊழியர்கள் சமையல் மற்றும் விளையாட்டு போன்ற நடவடிக்கைகளிலும் பங்கேற்கலாம் என்பதையும் அவர் தெரிவித்தார்.

இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு COVID-19 தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் திரு லீ கூறியுள்ளார்.

மேலும் 4 இடங்களுக்கு விமானங்களை மீண்டும் தொடங்க உள்ள SIA!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…