ஜுராங்கில் வேன் விபத்தில் சிக்கிய 4 பேர் தீக்காயங்களுடன் மருத்துவனையில் அனுமதி

Jurong crash injuries arrested
(PHOTOS: Shin Min daily News)

ஜுராங் ஹில்லில் (Jurong Hill) வேன் விபத்தில் சிக்கிய நான்கு பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 22 வயதான ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கட்டான சூழலில் உள்ள இந்தியாவுக்கு உதவ நிதி திரட்டும் சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம்

கடந்த ஏப்ரல் 26 அன்று இரவு 7.30 மணியளவில் ஜுராங் ஹில்லில் ஏற்பட்ட வாகன தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டது.

இதில் ஒருவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும், மேலும் மூன்று பேர் இங் டெங் ஃபாங் பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேனில் இருந்த பயணிகள் 4 பேரும், 17 முதல் 21 வயதுக்குட்பட்டவர்கள் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

வேன் கட்டுப்பாட்டை இழந்து புரளுவதற்கு முன்னால், சில புதர்களில் மோதியது என்று சீன நாளேடான ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.

இந்த தீ எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை காவல்துறை விசாரித்து வருகிறது.

முன்னெச்சரிக்கையாக தங்கும் விடுதிகளிலும், வேலையிடங்களிலும் கூடுதல் பரிசோதனை