முன்னெச்சரிக்கையாக தங்கும் விடுதிகளிலும், வேலையிடங்களிலும் கூடுதல் பரிசோதனை

இந்திய ஊழியர்கள் உட்பட மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்: உயிர்போக காரணமாக இருந்த 3 பேருக்கு சிறை
(Photo: TODAY)

வெஸ்ட்லைட் உட்லேண்ட்ஸ் தங்கும் விடுதியில் ஏற்பட்ட புதிய தொற்றுநோயை பாதிப்பைத் தொடர்ந்து தங்கும் விடுதிகளிலும் மற்றும் வேலையிடங்களிலும் கூடுதல் COVID-19 பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

கடந்த ஏப்ரல் 23 முதல் ஏப்ரல் 26 வரை, 5,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மனிதவள அமைச்சு (MOM) தெரிவித்துள்ளது.

“இந்தியாவுக்கு சமீபத்திய பயணம் மேற்கொண்டோருக்கு தடை – தேசத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல”

ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு முறை நடத்தப்படும் வழக்கமான சோதனைகளுடன், இது கூடுதலாக மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், இதில் COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்த ஊழியர்கள் மற்றும் இதுவரை பாதிக்கப்படாதவர்களும் அடங்குவர்.

வெஸ்ட்லைட் தங்கும் விடுதியில், நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்த 24 ஊழியர்களுக்கு மீண்டும் தொற்றுநோய் ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் தொற்று – சீன கட்டுமான ஊழியர்களை வேலைக்கு எடுக்க நிறுவனங்களுக்கு வசதி