அதிகரிக்கும் கொரோனா: துறைமுகங்களில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்.!

Jurong Senoko fishery ports
Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் உள்ள ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகம் நாட்டின் ஆகப் பெரிய நோய்த்தொற்று குழுமமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஜூரோங், செனோகோ (Senoko) மீன் வர்த்தக துறைமுகங்களில் கிருமித்தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு தலா S$50 பணத்தை வழங்கிய முகம் காட்டாத பெண்மணி

ஜூரோங் மற்றும் செனோகோ (Senoko) மீன் வர்த்தக துறைமுகங்களுக்குள் நுழைவோர் கட்டாய கிருமித்தொற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் சந்தைகளுடனான நேரடித் தொடர்பு கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்தின் நுழைவாயில், ஈரச்சந்தைகள் மற்றும் கடல் உணவுகளை இறக்கிவைக்கும் இடம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

துறைமுகத்தில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதை குறைக்கும் விதமாக, உணவு சாப்பிடும் இடம், புகை பிடிப்பதற்கான இடம் ஆகியவற்றை வெவ்வேறு வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகத்தின் மொத்த விற்பனை நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் 2ம் தேதியில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி உட்பட புதிதாக 4 தொற்று குழுமங்கள்…