ஜூரோங் வெஸ்ட்டில் லாரி மோதி ஆடவர் மரணம்: ஓட்டுநர் தப்பியோட்டம்

jurong-west accident death
Google Maps

சிங்கப்பூரில் சாலையைக் கடக்கும்போது லாரி மோதிய விபத்தில் 57 வயதுடைய ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

ஜூரோங் வெஸ்ட் அவென்யு 2 மற்றும் புலிம் அவென்யூ சந்திப்பில் கடந்த ஆகஸ்ட் 25, அன்று இந்த விபத்து ஏற்பட்டது.

சிங்கப்பூரில் தமிழ்நாட்டு ஊழியரின் அரிய வெற்றி.. முதலாளிக்கு எதிராக வழக்கு – நஷ்டஈடு பெற்று சாதனை

கடந்த வெள்ளிக்கிழமை காலை 9:25 மணிக்கு மேற்குறிப்பிட்ட இடத்தில் லாரி மற்றும் ஆண் பாதசாரி சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் போலீஸ் படை உறுதிப்படுத்தியது.

இதனை அடுத்து அந்த ஆடவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார் என போலீசார் கூறியுள்ளார்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

விபத்து நடந்த இடத்தில் ஒரு மாதமாக தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருப்பதாக ஷின்மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.

ஆகஸ்ட் 26 அன்று, Singapore Taxi Driver என்ற முகநூல் பக்கத்தில் இறந்தவரின் உறவினர் ஒருவர் வெளியிட்ட பதிவையும் ஷின் மின் நியூஸ் பகிர்ந்துள்ளது.

அதில் மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட லாரி தாக்கி அந்த ஆடவர் உயிரிழந்ததாக உறவினர் கூறினார்.

விபத்து நடந்த பிறகு லாரி ஓட்டுநர் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்தை நேரில் கண்ட சாட்சி இருந்தால் தொடர்பு கொள்ளும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

செப். 1 முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் – இந்திய ஊழியர்களுக்கு ஹோட்டல் துறையில் வேலை அனுமதி