சிங்கப்பூரில் வெளியானது ‘கலகத் தலைவன்’ திரைப்படம்!

Twitter Image

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”. கதாநாயகியாக நிதி அகர்வால் மற்றும் நடிகர்கள் கலையரசன், ஆரவ் உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைக்க, ஸ்ரீ காந்த் தேவா பின்னணி இசையமைத்துள்ளார்.

“இந்தியாவின் மேலும் ஒரு நகரத்தில் இருந்து அமெரிக்காவுக்கு நேரடி விமான சேவை”- ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு!

“கலகத் தலைவன்” திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இப்படம் இன்று (18/11/2022) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கா, துபாய், மலேசியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கண்டம் தாண்டிச் சென்று உணவு டெலிவரி செய்த சென்னையைச் சேர்ந்த பெண்! – சிங்கப்பூரிலிருந்து அண்டார்டிகாவுக்கு கொண்டு செல்லப்பட்ட உணவு என்ன?

குறிப்பாக, சிங்கப்பூரில் Carnival Cinema Golden Mile Tower, Cathay Parkway Parade, Cathay West Mall ஆகிய திரையரங்குகளில் ‘கலகத் தலைவன்’ திரைப்படம் வெளியாகியுள்ளது.