கனிமொழி எம்.பி.யின் கணவர் நுரையீரல் தொற்று காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி!

File Photo

தி.மு.க.வின் மாநில மகளிர் இளைஞரணிச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான க.கனிமொழியின் கணவர் அரவிந்தன். இவர் சிங்கப்பூரில் தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதனால் தற்போது அவர், சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அரவிந்தன் நுரையீரல் தொற்று காரணமாக, சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

புதிய வாடகை 100 சதவீதம்.. பழைய வாடகை 75% உயரும் – செலவு மிகுந்த நகரமாக மாறும் சிங்கப்பூர்

இது குறித்து தகவலறிந்த கனிமொழி எம்.பி. தனது மகனுடன் அவசர அவசரமாக, விமானம் மூலம் சிங்கப்பூருக்கு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து, தனது கணவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று, அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து வருகிறார். பின்னர், மருத்துவமனையிலேயே தங்கி தனது கணவரைக் கவனித்து வருகிறார்.

இந்த நிலையில், தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கனிமொழியை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு, அரவிந்தனின் உடல்நிலைக் குறித்து கேட்டறிந்தார்.

சிங்கப்பூரில் இருந்து திருப்பதிக்கு சென்ற 3 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

இதனிடையே, அரவிந்தனுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதால், அவரது உடல்நலம் வேகமாகத் தேறி வருகிறது. இதனால் ஒரு வாரத்திற்குள் அரவிந்தன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.