கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசித்த சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்!

Video Crop Image

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பகவதி அம்மன் கோயில். இந்த கோயில் உலகப் பிரசித்திப் பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். நாள்தோறும் சுமார் 100- க்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

சிங்கப்பூர் அமைச்சருக்கு விருந்து வைத்து அசத்திய தமிழக அமைச்சர்!

அந்த வகையில், தமிழகத்திற்கு தனது குடும்பத்தினருடன் வந்திருந்த சிங்கப்பூரின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், டிசம்பர் 16- ஆம் தேதி அன்று கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். சிங்கப்பூர் அமைச்சருக்கு சிறப்பான வரவேற்ப்பை அளித்த கோயில் நிர்வாகம், கோயில் பிரசாதங்களை வழங்கியது.

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், “கன்னியாகுமரிக்கு வர வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்து இருந்தது நிறைவேறியது. இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியா- சிங்கப்பூர் இடையே மிக நெருக்கமான உறவு இருந்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.

உட்லண்ட்ஸ் சாலையில் நிகழ்ந்த விபத்தில் கார் ஓட்டுநர் உயிரிழப்பு!

இந்த நிகழ்வின் போது, சிங்கப்பூர் அமைச்சருடன், தூதரக உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, மதுரைக்கு சென்றிருந்த அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், தமிழக நிதியமைச்சரைச் சந்தித்து விட்டு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.