கோலாலம்பூர்-சிங்கப்பூர் இடையேயான அதிவேக ரயில் (HSR) திட்டம் ரத்து

KL-Singapore HSR project terminated after agreement lapses
KL-Singapore HSR project terminated after agreement lapses (Photo: MyHSR)

கோலாலம்பூர்-சிங்கப்பூர் இடையேயான அதிவேக ரயில் (HSR) திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இரு நாடுகளின் பிரதமர்களும் இன்று (ஜனவரி 1) கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.

நேற்று (டிசம்பர் 31) அதிவேக ரயில் (HSR) திட்ட ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு ஆரம்பம்… சிங்கப்பூரில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்!

இந்த திட்டத்திற்க்காக கடந்த 2016ஆம் ஆண்டு, சிங்கப்பூர்-மலேசியா ஆகிய இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துகொண்டன.

இரு நாடுகளும் அந்தந்த கடமைகளுக்குக் கட்டுப்படும் என்றும், இந்த ஒப்பந்தத்தின் முடிவில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் நல்ல இருதரப்பு உறவுகளைப் பேணுவதில் உறுதியாக உள்ளதாகவும், மேலும் இரு நாடுகளுக்கிடையேயான இணைப்பை வலுப்படுத்துவது உட்பட பல்வேறு துறைகளில் நெருக்கமாக ஒத்துழைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்கீழ் சிங்கப்பூர் மேற்கொள்ளப்பட்ட அனைத்து செலவுகளுக்கும் மலேசியா இழப்பீடு வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் பிரதமர் திரு லீ அவர்களின் 2021 புத்தாண்டு செய்தி!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…