சிங்கப்பூர் பிரதமர் திரு லீ அவர்களின் 2021 புத்தாண்டு செய்தி!

PM Lee's 2021 New Year message
PM Lee's 2021 New Year message (PHOTO: MCI)

சிங்கப்பூர் கோவிட் -19 சூழல் நிலையாக இருந்தாலும், கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இன்னும் வெற்றியடையவில்லை என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

தனது 2021ஆம் ஆண்டின் புத்தாண்டு செய்தியில், தொற்றுநோயின் சவால்களை சமாளிக்க சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒன்றிணைந்ததற்காக பிரதமர் லீ பாராட்டினார்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

ஆனால், சமூக அளவில் கோவிட் -19 தொற்று மீண்டும் எழுச்சி பெறுவதைத் தவிர்க்க சிங்கப்பூரர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும் அவர் எச்சரித்தார்.

பிரதமர் லீயின் கூற்றுப்படி, சிங்கப்பூரின் கோவிட் -19 சூழல் பெரும்பாலும் நிலையாக உள்ளது, இதற்கு சிங்கப்பூரர்களின் “மிகப்பெரிய முயற்சி மற்றும் தியாகம்” மூலம் இது சாத்தியம் என்று கூறினார்.

கோவிட் -19 தொற்றின் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என்றும், மேலும் உள்ளூர் அளவில் புதிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சிறிய அளவிலும், பல நாட்களில் பூஜ்ஜியமாகவும் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் இருந்து வரும் கிருமித்தொற்று பாதிப்புகளில் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் உள்ளனர், மேலும் கட்டுமான ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டு வீட்டு பணிப்பெண்கள் ஆகியோரும் அதில் அடங்குகின்றனர். அவர்கள் புதிய வீட்டுத் திட்டங்களை செயல்படுத்தவும், சிங்கப்பூரர்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் பொருளாதார சிக்கல்களில் இருந்து முழுமையாக வெளியே வரவில்லை என்றாலும், நாடு நிலையான வளர்ச்சியை படிப்படியாக கண்டு வருவதாக பிரதமர் லீ கூறினார்.

பெரிய அளவிலான வேலை இழப்புக்கள் மற்றும் வர்த்தக சரிவுகளை சமாளிப்பதில் அரசாங்கத்தின் பங்கை பிரதமர் லீ குறிப்பிட்டார்.

மேலும் 2020இல் 100 பில்லியன் வெள்ளி மதிப்பிலான மொத்தம் ஐந்து பட்ஜெட்டுகள் நிறைவேற்றப்பட்டன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரர்களுக்கு உதவுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு அரசாங்க முன்முயற்சிகளான வேலைவாய்ப்பு ஆதரவு திட்டம், சுயதொழில் செய்பவர்களின் வருமான நிவாரண திட்டம் (SIRS), கோவிட் -19 ஆதரவு மானியம் மற்றும் பலவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.

சென்னை-சிங்கப்பூர் இடையே இருவழி பயணம் மேற்கொள்ள கூடுதல் விமானங்கள்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…