சிங்கப்பூரில் வெளிநாட்டவரிடம் கத்தி முனையில் 50,000 வெள்ளி கொள்ளை முயற்சி.!

Man linked knife attack

சிங்கப்பூரில் டெர்ரி போங் ஹோங் ஷி (Terry Tong Hong Zhi) என்ற 20 வயது இளைஞர், வியட்னாம் நாட்டை சேர்ந்த ஒருவரிடமிருந்து 50,000 வெள்ளியை கத்தி முனையில் கொள்ளையடிக்க முயற்சி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

டெர்ரி போங்கிற்கு சூதாடும் பழக்கம் இருந்ததால் அவருக்கு 40,000 வெள்ளி கடன் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் கொள்ளையில் ஈடுபடுவதற்கான திட்டங்களை போட்டுள்ளார்.

கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த மருத்துவ மாணவி… ரூபாய் 2 லட்சம் வழங்கிய சிங்கப்பூர் வாழ் தமிழர்!

விலைமதிப்புமிக்க Patek Philippe போன்ற கைக்கடிகாரங்களை விற்பதாக Carousell என்ற தளத்தில் தெரிவித்து பலரை ஈர்த்து அவர் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி மாலை 5.00 மணியளவில் கைக்கடிகாரம் வாங்க வந்த வியட்னாம் நாட்டவரை இயோ சூ காங்கில் உள்ள ஜெரல்ட் டிரைவுக்கு வரவழைத்து அவர் வைத்திருந்த 50,000 வெள்ளியை கத்தியைக் காட்டி பறிக்க அந்த இளைஞர் முயற்சி செய்துள்ளார்.

வியட்னாமியர் பணத்தை கொடுக்க மறுத்ததால் அவர் மீது கத்தியை வீசியிருக்கிறார். இதில், வியட்னாமியரின் முகத்தில் தையல் போடும் அளவுக்கு காயம் ஏற்பட்டது. கொள்ளை முயற்சியில் தோல்வியடைந்த நிலையில் டோங் தப்பி ஓடிவிட்டார்.

பின்னர், 2 நாட்கள் கழித்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த இளைஞருக்கு, மற்றொரு தேதியில் தண்டனை விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கத்தி முனையில் கொள்ளையடிக்க முயற்சி செய்த 20 வயது இளையரை சீர்திருத்தப் பயிற்சிக்கு அனுப்புவது குறித்து ஆராயுமாறு நீதிபதி நேற்று (மார்ச் 10) உத்தரவிட்டார்.

இதுதான் நம்ம சிங்கப்பூர்…தைப்பூச திருவிழாவை உலகநாடுகளின் பாரம்பரிய கலாசார மரபு பட்டியலில் சேர்க்க பரிந்துரை!