ஆயுதம் முனையில் பெண்ணை சிறைப் பிடித்த நபர் – வளைத்து பிடித்த போலீசார்

knifepoint yishun man arrest
DINO KARISHMA/FACEBOOK

யிஷுன் ரோட்டில் 60 வயதுமிக்க பெண்ணை ஆயுதம் கொண்டு மிரட்டியதாக 42 வயதுடைய ஆடவர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

யிஷுன் ரிங் ரோட்டில் இன்று காலை 7.35 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூர் வீராங்கனை 18 வயதில் மரணம் – இந்திய வீராங்கனையுடன் விளையாட இருந்தவருக்கு நேர்ந்த சோகம்!

இதில் அந்த ஆடவரிடம் இருந்து கத்தி கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட வீடியோவில், பிளாக் 108 யிஷுன் ரிங் ரோட்டின் ஆடவர் அந்த பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்திருப்பதைக் காணலாம்.

பெண்ணுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை.

இருவருக்கும் முன்பின் அறிமுகம் இல்லை என்றும், இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மெர்லியன் பார்க்கில் உள்ள நீர்ப்பகுதியில் மிதந்த 31 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் – யார் அவர் ?