பரப்பரப்பாகும் கோவை விமான நிலையம்: ஒரே நாளில் 25 விமான சேவை.. சிங்கப்பூருக்கு நேரடி விமானம்!

தமிழ்நாட்டின், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்காக இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு உட்பட மொத்தம் 25 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன.

VTL அல்லாத வழக்கமான விமானங்களை இயக்கும் “Scoot” – ‘கோவை, திருச்சி’ பயணிகளுக்கு நற்செய்தி

சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களுக்கு நேரடி விமானங்கள் அங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

அதோடு மட்டுமல்லாமல், பல்வேறு முக்கிய நகரங்களுக்கு விமான சேவை இயக்கவும் கோவை ஏர்போர்ட் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதில், சிங்கப்பூரில் இருந்து Scoot விமானம் மற்றும் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா நிறுவன விமானமும் கோவைக்கு இயக்கப்படுகின்றன.

இதில் முக்கியமாக வெளிநாடுகளில் இருந்து கோவை வரும் பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

வைரஸின் தாக்கம் குறிப்பிடப்படாத நிலை…சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் – எச்சரிக்கும் நாடு